உ.பி.யில் கொரியா ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் 9-வது மாடியிலில் இருந்து குதித்து தற்கொலை

0
20

உத்தர பிரதேச மாநிலம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த வெளி​நாட்டு கரன்சி வியா​பாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் 9-வது தளத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.

இவர்​கள் கரோனா காலத்​தில் செல்​போன் மூலம் ஆன்​லைன் வகுப்​பு​களில் பாடம் கற்ற போது ஆன்​லைன் விளை​யாட்டை கற்றுக் கொண்​டனர். நாளடை​வில் இவர்​கள் கொரியன் ஆன்லைன் விளை​யாட்​டுக்கு அடிமை​யாகி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில் இவர்​கள் நேற்று முன்​தினம் காலை தற்​கொலை செய்ய முடிவு செய்​தனர். “சாரி அப்​பா’. கொரி​யா​தான் எங்​கள் வாழ்க்​கை. அதை எங்​களால் கைவிட முடி​யாது” என்ற குறிப்பு எழுதி​விட்டு இவர்​கள் பூஜை அறைக்கு சென்று கதவை மூடியுள்ளனர். ஒரு நாற்​காலி மீது ஏறி ஜன்​னல் வழி​யாக ஒருவர்பின் ஒரு​வ​ராகக் குதித்து தற்​கொலை செய்​துள்​ளனர்.

இவர்​கள் கீழே விழுந்த சத்​தத்தை கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்​தவர்​கள் வெளியே வந்து பார்த்​துள்​ளனர். ரத்த வெள்​ளத்​தில் கிடந்த சகோ​தரி​கள் அரு​கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். அவர்​கள் இறந்துவிட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

கொரியன் லவ் கேம்: விசா​ரணை​யில் தற்​கொலை செய்து கொண்ட 3 சகோ​தரி​களும் ஆன்​லைன் விளை​யாட்டு செயலி மூலம் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்​லைன் விளை​யாட்​டில் ஈடுபட்​டுள்​ளனர். இந்த விளை​யாட்டை தொடங்​கும்​போது சமூக ஊடகம் மூல​மாக தொடர்பு கொள்​ளும் நபர், விளையாடுபவர்களுடன் இனிமை​யாக பேச்சு கொடுப்​பார். போட்டோக்​களை பகிர்ந்து கொள்​வார். பின்​னர் கொரியா பொழுது​போக்கு கலாச்​சா​ரம், கொரியா நாடகங்​கள் ஆகியவை உட்பட சிறிய இலக்​கு​களு​டன் கூடிய போட்​டியை நடத்​து​வார்.

இது நாளடை​வில் கடின​மான இலக்​காக மாறும். இதை முடிக்கவில்லை என்​றால், சவால்​கள் தொடர்ந்து 50 நாட்​களுக்கு இருக்​கும் என மிரட்​டல் விடுக்​கப்​படும். இதற்கு பயந்து சிறு​வர்​கள் அந்த விளை​யாட்டை தொடர்​வர். இந்த விளை​யாட்​டில் மொத்​தம் 50 இலக்​கு​கள் இருக்​கும், இறுதி இலக்கு தற்​கொலை சவாலில் முடியும் என கூறப்​படு​கிறது.

இந்த விளை​யாட்​டில் மூழ்கி 3 சகோ​தரி​களும் தற்​கொலை செய்திருப்​பார்​கள் என நம்​பப்​படு​கிறது. இவர்​களை ஆன்​லைன் விளை​யாட்​டில் ஈடுபட வேண்​டாம் என பெற்​றோர் தடுக்​கும்​போதெல்​லாம் “கொரி​யா​தான் எங்​கள் வாழ்க்​கை, கொரி​யா​தான் எங்​களுக்கு பிடிக்​கும். நீங்​கள் என்ன சொன்​னாலும், கொரியா ஆன்​லைன் விளை​யாட்டை கைவிட முடி​யாது” என சிறுமிகள் கூறி​யுள்​ளனர்.

தற்கொலை தீர்வல்ல…

தற்​கொலை என்​பது எந்​தவொரு பிரச்​சினைக்​கும் தீர்வு இல்​லை. தற்​கொலை செய்து கொள்​ளும் எண்​ணம் தோன்​றி​னால் உடனடியாக சினேகா தற்​கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464 0050, மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்​ள​வும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here