ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு

0
22

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்​றனர்.

இந்நிலையில், நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் கிரசி​யன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாக​ராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்​து, காரைநகர் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர்.

பின்​னர் அவர்​களை இலங்கை மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட மீனவர்களை, ஜன.13-ம் தேதி வரை யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். கடந்த ஒரு வாரத்​தில் 18 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்​யப்பட்டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here