ஐசிசியின்​ சிறந்த அணியில் 3 இந்திய வீராங்க​னை​கள்

0
18

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.

இந்​நிலை​யில் இந்த தொடரின் சிறந்த அணியை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) அறி​வித்​துள்​ளது. இதில் இந்​திய அணி​யின் ஸ்மிருதி மந்​த​னா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், தீப்தி சர்மா ஆகியோர் இடம் பிடித்​துள்​ளனர்.

தொடக்க வீராங்​க​னை​யான மந்​தனா 54.25 சராசரி​யுடன் 434 ரன்​கள் எடுத்​திருந்​தார். இதில் ஒரு சதம், 2 அரை சதங்​கள் அடங்​கும்.
ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஒரு சதம், அரை சதத்​துடன் 58.40 சராசரி​யுடன் 292 ரன்​கள் குவித்​திருந்​தார். ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான அரை இறு​தி​யில் அவர், 127 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார்.

தீப்தி சர்மா பேட்​டிங்​கில் 3 அரை சதங்​களு​டன் 215 ரன்​களும், பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தி​யிருந்​தார். இறு​திப் போட்​டி​யில் 5 விக்​கெட்​களை வேட்​டை​யாடிய அவர், தொடர் நாயகி விருதை​யும் வென்​றிருந்​தார்.

2-வது இடம் பிடித்த தென் ஆப்​பிரிக்க அணி​யில் இருந்​தும் 3 வீராங்​க​னை​களுக்கு இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசிய
லாரா வோல்​வார்ட் தொடரின் சிறந்த அணிக்​கான கேப்​ட​னாக தேர்​வாகி உள்​ளார். அவர், 71.37 சராசரி​யுடன் 571 ரன்​கள் குவித்து சாதனை படைத்​திருந்​தார்.

ஐசிசி அணி விவரம்: ஸ்மிருதி மந்​தனா (இந்​தி​யா), லாரா வோல்​வார்ட் (தென்​னாப்​பிரிக்​கா), ஜெமிமா ரோட்​ரிக்ஸ் (இந்​தி​யா), மரி​சான் காப் (தென்​னாப்​பிரிக்​கா), ஆஷ் கார்ட்​னர் (ஆஸ்​திரேலி​யா), தீப்தி சர்மா (இந்​தி​யா), அன்​னாபெல் சதர்​லேண்ட் (ஆஸ்​திரேலி​யா), நாடின் டி கிளார்க் (தென்​னாப்​பிரிக்​கா), சித்ரா நவாஸ் (பாகிஸ்​தான்), அலானா கிங் (ஆஸ்​திரேலி​யா), சோஃபி எக்​லெஸ்​டோன்​ (இங்கிலாந்து), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here