Home தேசிய செய்திகள் மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது

மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது

0

மத்​திய பிரதேச அரசு மருத்துவமனை​களில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்​யப்​பட்டு உள்ளனர். தேசிய சுகா​தார திட்​டத்​தின் கீழ் மத்​திய பிரதேச அரசு சார்​பில் மாநிலம் முழு​வதும் 783 சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் 2,000-க்​ கும் மேற்​பட்ட மருத்​து​வர்​கள் உள்ளனர். அவர்​களுக்கு மாதம் ரூ.80,000 ஊதி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் தமோ நகரில் செயல்​படும் சஞ்​சீவினி மருத்துவமனை​யில் போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை மற்​றும் காவல் துறை இணைந்து தமோ பகுதி சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் திடீர் சோதனை நடத்​தினர்.

அப்​போது அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​களாக பணியாற்​றிய குமார் சச்​சின் யாதவ், ராஜ்​பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்​து​வர்​கள் என்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அவர்​கள் 3 பேரும் கைது செய்​யப்பட் டனர்.

இதுகுறித்து சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கைதான போலி மருத்​து​வர்​கள் ரூ.10 லட்​சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்​றிதழை பெற்று உள்​ளனர். 3 போலி மருத்துவர்களும் சுமார் 2 ஆண்​டு​களுக்கு மேலாக அரசு மருத்துவர்​களாக பணி​யாற்றி நோயாளி​களுக்கு சிகிச்சை அளித்து உள்​ளனர்.

தமோ பகு​தி​யைத் தொடர்ந்து மாநிலம் முழு​வதும் சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்றும் மருத்​து​வர்​கள் குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. முதல்​கட்ட விசா​ரணை​யில் 10 மாவட்​டங்​களை சேர்ந்த சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் 14 போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்​று​வது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

அவர்​களில் சிலர் பணி​யில் இருந்து திடீரென ராஜி​னாமா செய்துள்​ளனர். சிலர் பணிக்கு வரவில்​லை. 14 பேரும் தலைமறைவாகி விட்​டனர். அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்தப்​பட்டு உள்​ளது. சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் மாநிலம் முழு​வதும் 80 மருத்​து​வர்​களின் எம்​பிபிஎஸ் சான்றிதழ்கள் தீவிர ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்டு உள்​ளன. இவ்வாறு மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் தெரிவித்​துள்​ளன.

இதுதொடர்​பாக மத்​திய பிரதேச போலீஸ் மூத்த அதி​காரி அலோக் ஸ்ரீவஸ்​தவா கூறிய​தாவது: தேசிய சுகா​தார திட்ட அதிகாரி​கள் அளித்த புகார்​களின் அடிப்​படை​யில் போலி மருத்துவர்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இவர்​கள் மூத்த மருத்​து​வர்​களின் பதிவெண்​களை பயன்​படுத்தி போலி எம்பிபிஎஸ் சான்​றிதழ்​களை தயாரித்து உள்​ளனர்.

சிலர் ஆயுர்​வேதம், சித்தா மருத்​து​வப் படிப்​பு​களை படித்​து​விட்டு போலி எம்​பிபிஎஸ் சான்​றிதழ்​களை ரூ.8 லட்​சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்​ளனர்.

இவர்​களுக்கு போலி எம்​பிபிஎஸ் சான்​றிதழ்​களை தயாரித்து கொடுத்​தது யார், தேசிய சுகா​தார திட்​டத்​தில் இவர்​களை பணி​யில் சேர்த்​தது யார் என்​பது குறித்து தீவிர​மாக வி​சா​ரணை நடத்தி வரு​கிறோம். இந்த மோசடி​யில் தொடர்​புடைய அனை​வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்​. இவ்​வாறு போலீஸ்​ மூத்​த அதி​காரி அலோக்​ ஸ்ரீவஸ்​த​வா தெரிவித்துள்ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version