காசா மக்களுக்கு உதவுவதாக ரூ.5 கோடி வசூலித்த 3 பேர் கைது

0
88

போரால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு உதவுவ​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.5 கோடி நிதி திரட்​டி​யுள்​ளது. ஆனால் இந்​தப் பணத்தை சொந்​தப் பயன்​பாட்​டுக்கு மடை மாற்​றி​யுள்​ளது. இந்​தப் பணம் தேச​விரோத செயல்​களுக்​கும் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் பிவாண்​டி​யில் 3 பேரை உ.பி. காவல் துறை​யின் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்​துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்​டி​யார், அபு சுபி​யான் என்ற இந்த மூவரும் 22 வயதுடைய​வர்​கள். பிவாண்​டி​யில் வெவ்​வேறு பகு​தி​களை சேர்ந்​தவர்​கள்.

இந்த மோசடி பிவாண்டி அல்​லது உ.பி.​யில் மட்​டும் நடை​பெற​வில்​லை. 20 மாநிலங்​களில் நடை​பெற்​றுள்​ளது. இது​வரை கிடைத்த மின்​னணு மற்​றும் நிதி ஆதா​ரங்​களின்​படி, கிரீஸ் நாட்​டில் இருக்​கும் ஒரு​வ​ரால் இந்த மோசடி திட்​ட​மிடப்​பட்​டு, அரங்கேற்றப்பட்டுள்ளது.

உ.பி. வங்​கிக் கணக்​கு​களில் இருந்து மேற்​கொள்​ளப்​பட்ட 50 பரிவர்த்​தனை​கள் தொடர்​பாக உளவுப்​பிரிவு அளித்த தகவலின் அடிப்​படை​யில் ஏடிஎஸ் விசா​ரணை நடத்​தி​யது. இதில் இந்த மூவரும் கடந்த சனிக்​கிழமை கைது செய்​யப்​பட்​டனர்.

காசா​வில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் தொடர்​பான உணர்​வுபூர்​வ​மான வீடியோக்​களை சமூக வலை​தளங்​களில் பரப்பி இவர்​கள் நிதி திரட்​டி​யுள்​ளனர். சட்​ட​விரோத செயல்​களுக்கு நிதி பயன்​படுத்​தப்​பட்​டது உறு​தி​யா​னால் சட்​ட​விரோத செயல்​கள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று உ.பி. ஏடிஎஸ்​ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here