Home உலக செய்திகள் ​தாய்லாந்து கேளிக்கை விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

​தாய்லாந்து கேளிக்கை விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

0

தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் 27 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 73 பேர் காயம் அடைந்​தனர்.

தாய்​லாந்து தலைநக​ரான பாங்​காக் நகரின் சட்​டுசக் பகு​தி​யில் ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற பெயரில் பிரபல மது​பான மற்​றும் கேளிக்கை விடுதி உள்​ளது. இந்த விடு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு மேடைக்கு அரு​கில் இருந்த மின்​சாதனம் திடீரென வெடித்து தீப்​பற்​றியது. இதையடுத்து மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்ட அறை முழு​வதும் தீ மிக வேக​மாகப் பரவி, கரும் புகை சூழ்ந்​துள்​ளது.

இது தொடர்​பான காட்​சிகள் இணைய தளங்​களில் வெளியாகியுள்​ளன. அவற்​றில் தீப்​பிழம்​பு​கள் சூழ்ந்த கேளிக்கை விடு​தி​யின் முன்​வாசல் வழி​யாக, வாடிக்​கை​யாளர்​கள் தங்​களின் ஆடைகளில் தீப்​பற்​றிய நிலை​யில் அலறியபடி ஓடிவருவதை காண​முடிகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை​யினர் அரை மணி நேரத்​துக்​கும் மேலாக போராடி தீயை கட்​டுப்​படுத்​தினர்.

எனினும் இந்த தீவிபத்​தில் 9 ஆண்​கள், 18 பெண்​கள் என 27 பேர் உயி​ரிழந்​தனர். மொத்​தம் 73 பேர் காயம் அடைந்​தனர். இவர்களில் படு​கா​யம் அடைந்த 25 பேர் கவலைக்​கிட​மான நிலை​யில் இருப்பதாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இறந்​தவர்​களில் பலர்கரும் புகையை சுவாசித்​த​தால் மூச்​சுத்​திணறி இறந்துள்ளனர். கேளிக்கை விடு​தி​யின் கூரை​யில் எளி​தில் தீப்பற்றக்​கூடிய உட்​புற அலங்​காரப் பொருட்​கள் இருந்​தன. இதுவே தீ வேக​மாகப் பரவுவதற்கு காரண​மாக இருக்​கலாம் என கருதப்​படு​கிறது.

உயி​ரிழந்த பலரது உடல்​கள் கழிப்​பறை​யில் இருந்து மீட்கப்பட்டன. தீயி​லிருந்து தப்​பிக்க அவர்​கள் அங்கு தஞ்​சம் அடைந்​திருக்​கலாம் எனத் தெரி​கிறது. ஏசி சாதனத்​தில் ஏற்​பட்ட மின் கசிவு காரண​மாக இத்​தீ​விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என கருதப்​படு​கிறது. எனினும் இது தொடர்​பான அதி​காரப்​பூர்வ அறிவிப்பு இன்​னும் வெளி​யாக​வில்​லை. இதுகுறித்து விரி​வான விசா​ரணை நடத்​தப்​படும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தீப்​பற்றி எரிந்த இடத்​திலிருந்து மக்​கள் தப்பி ஓட முயன்​ற​போது, அவசர​கால வெளி​யேறும் வழிகள் தடுக்​கப்​பட்​டிருந்​த​தாக தெரிகிறது. இது தொடர்​பான விடுதி நிர்​வாகத்​தின் அலட்​சி​யப் போக்கு குறித்​தும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சம்பவ இடத்தை தாய்​லாந்து பிரதமர் அனு​தின் சர்ன்​வி​ராகுல் நேற்று காலை​யில் நேரில் பார்​வை​யிட்​டார். இறந்​தவர்​களின் குடும்​பங்​களுக்​கும் காயம் அடைந்​தவர்​களுக்​கும் அரசு நிதி​யுதவி அறி​வித்​துள்​ளது. தாய்​லாந்​தில் இது​போன்ற ஒரு சம்​பவம் நடப்​பது இது முதல் முறையல்ல.

கடந்த 2022-ல், பாங்​காக் நகருக்கு தெற்​கில் உள்ள ஒரு நகரில் மதுபான விடு​தி​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 22 பேர் உயி​ரிழந்​தனர். 2009 ஜனவரி 1-ம் தேதி பாங்​காக் நகரில் ஒரு இரவு விடு​தி​யில் புத்தாண்டு விழா​வில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 66 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். கடந்த 2024-ல் சட்​டுசக் பகு​தி​யில் உள்ள பிரபல திறந்​தவெளி சந்​தை​யில் மின் கசிவு காரண​மாக நிகழ்ந்​த தீ விபத்​தில்​ சுமார்​ 1,000 விலங்​கு​கள்​ உயிரிழந்​தன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version