பள்ளி கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0
291

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 30, 31-ம் தேதிகளில் 1,175 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 48 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளும், சென்னை, பெங்களூரு மற்றும் பல்வேறு இடங்களுக்குத் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 850 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வார இறுதி நாட்களில் பயணிக்க 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here