Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ். பி தகவல்

குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ். பி தகவல்

0

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும், சுமார் 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஏற்பாடுகள் முதலமைச்சரின் வருகையின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் செய்யப்படுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version