Home சினிமா செய்திகள் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு 250 நாட்கள் படப்பிடிப்பு

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு 250 நாட்கள் படப்பிடிப்பு

0

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படமான ‘காந்தாரா’, கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிகஎதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது.

அதில் பேசும் ரிஷப் ஷெட்டி, “மூன்று வருட இடைவிடாத அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் இதன் படப்பிடிப்பு 250 நாட்கள் நடந்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்தாலும் இந்தப் பயணம் முடியவில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. தெய்வீக காவியமான இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version