சென்னையில் பிப்ரவரி இறுதிக்குள் புதிதாக 245 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

0
26

இம்​மாத இறு​திக்​குள் சென்​னை​யில் மேலும் 245 மின்​சார பேருந்துகள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும் என மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில் சுற்​றுச்​சூழல் மாசு​பாட்டை குறைக்க, டீசல் பேருந்​துகளுக்கு பதிலாக மின்​சார பேருந்​துகளைப் பயன்​படுத்த தமிழக அரசு முடிவு செய்​தது. அதன்​படி, கடந்த ஜூன் மாதம் சென்​னை​யில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவை தொடங்​கப்​பட்​டது.

வியாசர்​பாடி பணிமனை​யில் இருந்து தொடங்​கப்​பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்​பாக்​கம், பூந்​தமல்லி ஆகிய பணிமனை​களில் இருந்​தும் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

625 மின்​சார பேருந்​துகளை வாங்​கு​வதற்​காக ஒப்​பந்​தம் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது வரை 380 மின்​சார பேருந்துகள் பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. மேலும், 245 பேருந்​துகளை விரை​வில் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

இதுகுறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: பல்​ல​வன் இல்​லம் மத்​திய பணிமனை​யில் மின்​சார பேருந்​துகளுக்​கான பணிமனை கட்​டு​மான பணி​கள் முடிக்​கப்​பட்​டு, தயார் நிலை​யில் உள்​ளது. 245 மின்​சார பேருந்துகள் தயாரிப்பு பணி​கள் முடிந்​துள்​ளன, விரை​வில் சோதனை ஓட்​டம் நடத்​தப்​படும்.

பிப்​ர​வரி இறு​திக்​குள் இவை பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். இதில் 145 பேருந்துகள் பல்​ல​வன் இல்​லம் பணிமனை​யுட​னும் 100 பேருந்துகள் தண்​டை​யார்​பேட்டை பணிமனை​யுட​னும் இணைக்​கப்​படும். 2-வது கட்​ட​மாக மேலும் 600 மின்​சார பேருந்​துகளை கொள்​முதல் செய்​வதற்​கான நடவடிக்​கை​யில் மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் ஈடு​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here