சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டனர். இதன் காரணமாக பல மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் மட்டும் 238 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள 13 பெண்கள் உட்பட 21 மாவோயிஸ்ட்கள் போலீஸார் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நேற்று சரண் அடைந்தனர்.
இதுகுறித்து பஸ்தார் ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறும்போது, ‘‘மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ தேவையானதை பஸ்தார் காவல் துறை செய்யும்’’ என்றார்.














