Home 2024
Yearly Archives: 2024
டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி பொய் வாக்குறுதி: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
பஞ்சாபில் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு குற்றம் சாட்டி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் வரும் ஜனவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவ்நீத்...
தமிழ் மொழியால் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சி நேற்றுடன் 117-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளதாவது: உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.
இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விஷயம்....
மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சீக்கிய மத வழக்கப்படி அவரது உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் தகனம்...
உ.பி.யில் செல்போன் திருட்டு கும்பலுக்கு மாதச் சம்பளம், பயணப்படி: ரயில்வே போலீஸ் விசாரணையில் தகவல்
செல்போன் திருடும் கும்பல், தனது குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், தங்கும் இடம், உணவு, பயண செலவு ஆகிய சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
உத்தர பிரேதேசத்தில் ரயில்களில் செல்போன் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து உ.பி கோரக்பூர் ரயில்வே போலீஸார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவை ஆராய்ந்தனர். கோரக்பூர் ரயில் நிலையத்துக்கு தொடர்ச்சியாக வந்த சந்தேக நபர்கள் சிலரை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் திருடும் கும்பல என்பது உறுதியானது....
திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்த காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி: டிஜிபியிடம் தேவஸ்தான உறுப்பினர் புகார் மனு
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தை எண்ணும்போது ரூ.100 கோடி வரை மோசடி செய்த விவகாரம் குறித்து முன்னாள் அறங்காவலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர மாநில டிஜிபி திருமலராவிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
திருமலை பெரிய ஜீயர் மடத்தில் பணியாற்றிய ரவிகுமார் என்பவர் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை எண்ணும் இடமான ‘பரகாமணி’ க்கு மேற்பார்வையாளராக கடந்த ஜெகன் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். இவர் தனது உள்ளாடை மூலம் பல வெளிநாட்டு கரன்சிகளை அவ்வப்போது திருடி...
பெங்களூரு தனியார் நிறுவன வங்கி கணக்கில் ரூ.12 கோடி மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, ‘டிரீம்பிளக் பேடெக் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. இந்நிலையில், டிரீம்பிளக் நிறுவனத்தின் செயல் அதிகாரி நரசிம்ம வசந்த் சாஸ்திரி போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: டிரீம்பிளக் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் வைத்துள்ள 2 கணக்குகளில் இருந்து ரூ.12 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.டிரீம்பிளக் நிறுவனத்தின் முக்கிய தகவல்களை ஆக்சிஸ் வங்கியில் கொடுத்து புது ஐடி, இ மெயில் ஐ.டி. போன்றவற்றுக்கான அனு மதி பெறப்பட்டுள்ளது. வங்கிக்கு 2 ஐடி...
சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை: இந்திய ராணுவம் திறப்பு
இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
இந்த சிலையை திறந்து வைத்து இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
14,300 மலைச் சிகரத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள இந்த சிலை சிவாஜியின் வீரம், தொலைநோக்கு பார்வை மற்றும்...
மாணவி பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லையென்றால் சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், ‘‘உலக ஆடியோ, காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு’’, இந்தியாவில் முதல்முறையாக 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக...
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது
விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக இன்று (டிச.30) இரவு விண்ணில் செலுத்தப்படுகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்ணில் விண்கலன்களை...
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டு உற்சாகம் இப்போதே தொடங்கிவிட்டது. 2024-க்கு விடைகொடுத்து 2025-ஐ வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவு என 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில்...














