அசாம் நிலக்கரி சுரங்கத்தில் 20 பேர் சிக்கித் தவிப்பு

0
181

 அசாமின் கலாமதி நகர் அருகே உம்ரங்சூ பகுதி உள்ளது. அங்கு நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்த சுரங்கம் சட்டவிரோத மாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ பகுதியில் மீட்புப் பணி
யில் ஈடுபட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here