பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்

0
13

டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில் தெரி​வித்​தது. இதன்​படி சுமார் 12,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்று தெரி​கிறது.

இந்த சூழலில் டிசிஎஸ் நிறு​வனத்​தில் இருந்து பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு முன்​கூட்​டியே நோட்​டீஸ் வழங்​கப்​படும். அவர்​களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்​கள் முதல் 2 ஆண்​டு​கள் வரையி​லான ஊதி​யம் இழப்​பீ​டாக வழங்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதன்​படி 8 மாதங்​களுக்கு மேல் பணி ஒதுக்​கப்​ப​டா​மல் இருக்​கும் ஊழியர்​களுக்கு சிறிய அளவி​லான இழப்​பீடு மட்​டுமே கிடைக்​கும். 10 ஆண்​டு​கள் முதல் 15 ஆண்​டு​கள் வரை பணி​யாற்​றிய ஊழியர்​களுக்கு 18 மாதங்​களுக்​கான ஊதி​யம் கிடைக்​கும். அதற்கு மேல் பணி​யாற்​றிய​வர்​களுக்கு 24 மாதங்​களுக்​கான ஊதி​யம் கிடைக்​கும் என்று கூறப்​படு​கிறது.

பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​கள், புதிய வேலை​வாய்ப்​பு​களை தேடு​வதற்கு தேவை​யான உதவி​களை டிசிஎஸ் வழங்​கும். மேலும் ஓய்வு பெறும் வயதில் இருப்​பவர்​கள், விருப்ப ஓய்வு திட்​டத்​தில் நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேற ஏற்​பாடு செய்​யப்​படும் என்று டிசிஎஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here