அமெரிக்காவின் ‘பிரேக்கிங் பேட்’ தொடர் பாணியில் போதை மருந்து தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது

0
217

அமெரிக்காவில் ‘பிரேக்கிங் பேட்’ என்ற தொலைக்காட்சி தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அதில், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் போதை மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதே பாணியில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா சாகர் மாவட்டம் முக்லவா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மனோஜ் பார்கே (25), போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் இந்திரஜீத் விஷ்னோய் ஆகிய இருவரும் போதை மருந்து தயாரித்துள்ளனர்.

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு மெபட்ரோன் என்ற போதை மருந்தை தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனர். கடந்த இரண்டரை மாதங்களில் ரூ.15 கோடி மதிப்பிலான 5 கிலோ போதை மருந்துகளை அவர்கள் தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here