கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (வயது 34), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஆஸ்வின் (25), அமிர்தானந்த் (23) ஆகியோர் மது குடிப்பது வழக்கம். இதனை சுந்தர் கணேஷ் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அஸ்வின், அமிர்தானந்த் ஆகியோர் கணேசனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் அஸ்வின், அமிர்தானந்த் ஆகிய 2 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.














