ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2 பேர் கைது

0
12

ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு இன்று தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் பாஜக தரப்​பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்​பில் 2 பேர் என மொத்​தம் 5 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 30 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. பாஜக​வுக்கு 79 எம்​எல்​ஏக்​களும், 3 சுயேச்​சைகளின் ஆதர​வும் உள்ளது. இதன்​ மூலம் 2 எம்​பிக்​களை பாஜக​வால் தேர்வு செய்ய முடி​யும். அந்த கட்​சி​யிடம் மீதம் 22 எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​கள் மட்​டுமே உள்​ளன.

பிஜு ஜனதா தளம் கட்​சி​யில் (பிஜேடி) 48 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். 14 எம்​எல்​ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், பிஜேடி-க்கு ஆதரவு அளித்​துள்​ளது. இதன்​படி பிஜு ஜனதா தளத்​தால் 2 எம்​பிக்​களை தேர்வு செய்ய முடி​யும்.

இந்த சூழலில் குதிரை பேரம் அச்​சத்​தால் காங்​கிரஸின் 8 எம்​எல்​ஏக்​கள், கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் உள்ள விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர். அவர்​களுக்கு 2 பேர் லஞ்​சம் கொடுக்க முயன்​ற​தாகக் கூறப்​படு​கிறது. இதன்​பேரில் 2 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து கர்​நாடக துணை முதல்​வர் சிவகு​மார் கூறும்​போது, “காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களுக்கு தலா ரூ.5 கோடி வழங்க 2 பேர் பேரம் பேசி உள்​ளனர். ஆனால் எங்​கள் எம்​எல்​ஏக்​கள் மறுத்துவிட்டனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here