டெல்லில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீஸார் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் 4 போலீஸாருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதையடுத்து போராட்டக்கார்கள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.









