இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு: 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர் 

0
18

 இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த வழி​யாக சென்ற பேருந்து நிலச்​சரி​வில் சிக்​கியது.

தகவல் அறிந்து போலீ​ஸார் மற்​றும் தீயணைப்புப் படை, மாநில பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர். ஜேசிபி இயந்​திரம் மூலம் மண்ணை அகற்​றும் பணி நடை​பெற்​றது. இதில் 15 பயணி​கள் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். ஒரு குழந்தை உயிருடன் மீட்​கப்​பட்​டது. பேருந்​தில் பயணம் செய்த 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். அவர்​களை மீட்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here