சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 மாவோயிஸ்ட்கள் சரண்

0
19

சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் பிராந்​தி​யத்​தில் 108 மாவோ​யிஸ்ட்​கள் பாது​காப்​புப் படை​யினரிடம் நேற்று சரணடைந்​தனர். இவர்​களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, சரணடைந்​தவர்​களில் 8 பேர் மாவோ​யிஸ்ட்​களின் முக்​கியக் குழு உறுப்​பினர்​கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் மாவோ​யிஸத்தை முற்​றி​லும் ஒழிப்​ப​தாக மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்​நிலை​யில், பிஜப்​பூர் மாவட்​டத்​திலிருந்து 37 பேரும், தந்தே​வா​டா​வில் இருந்து 30 பேரும் சரணடைந்​துள்​ளனர்​.

சரணடைந்த மாவோ​யிஸ்ட்​கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்​கள் மறைத்து வைத்​திருந்த மிகப்​பெரிய ஆயுதக் கிடங்கை பாது​காப்​புப் படை​யினர் கண்​டறிந்து பறி​முதல் செய்​தனர். மாவோ​யிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை வரலாற்​றிலேயே இதுவே மிகப்​பெரிய ஆயுதப் பறி​முதல் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு 21 உறுப்​பினர்​களு​டன் இயங்​கிவந்த மாவோ​யிஸ்ட் மத்​திய குழு​வில் தற்​போது 2 பேர் மட்​டுமே தலைமறை​வாக உள்ளனர். ஒரு சிலர் சரணடைந்​துள்​ளனர். மற்​றவர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here