தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

0
21

சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் சோதனை​யில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கின. ஒரத்​த​நாடு திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய விசிட்​டிங் கார்​டு​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சென்னை அண்​ணாநகர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்​தனர். அப்​போது அதில் 100 டம்மி மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) இருந்​தது தெரிய​வந்​தது.

மேலும் திமுக ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாளர் வைத்​தி​யலிங்​கத்​தின் புகைப்​படங்​கள் அடங்​கிய விசிட்​டிங் கார்​டு​கள் கொண்ட 5 பார்​சல்​கள் இருந்​தன. இதனைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த தேர்​தல் பறக்​கும் படை​யினர் அனைத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.

பின்​னர் அவற்றை அண்​ணாநகர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரி அலு​வல​கத்​துக்​குக் கொண்டு சென்​றனர். விசா​ரணை​யில் பார்​சல் கொண்டு சென்ற நபர் சேலத்​தைச் சேர்ந்த செல்​வம் என்​பதும், ஆட்டோ ஓட்டி வந்​தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்​பதும் தெரிய​வந்​தது.

பறி​முதல் செய்​யப்​பட்ட டம்மி இவிஎம் இயந்​திரங்​களை தனி​யார் பேருந்து மூலம் ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகு​திக்கு அனுப்பி வைக்க திட்​ட​மிட்டு இருந்​ததும், வாக்கு சேகரிப்​பின்​போது வைத்​திலிங்​கம் புகைப்​படம் ஒட்​டிய இந்த டம்மி மிஷினை காண்​பித்து வாக்கு சேகரிக்க திட்​ட​மிட்டு இருந்​ததும் தெரிய​வந்​தது.

இந்த விவ​காரம் ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்​டது என்​ப​தால் அந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரிக்​கு தகவல்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here