10 ஆயிரம் ரன்​கள்: ஸ்மிருதி சாதனை

0
14

சர்​வ​தேச மகளிர் கிரிக்​கெட் போட்​டிகளில் 10 ஆயிரம் ரன்​கள் குவித்த 4-வது வீராங்​கனை என்ற சாதனையை இந்​திய வீராங்​கனை ஸ்மிருதி மந்​தனா நிகழ்த்​தி​யுள்​ளார்.

திரு​வனந்​த​புரத்​தில் இந்​தி​யா, இலங்கை அணி​களுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 20 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 221 ரன்​கள் குவித்​தது. இதில் ஸ்மிருதி மந்​தனா 27 ரன்கள் எடுத்​திருந்​த​போது சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் 10 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீராங்​கனை என்ற சாதனையைப் படைத்​தார்.

இந்த வரிசை​யில் இந்​திய வீராங்​கனை மிதாலி ராஜ் 10,868 ரன்​கள் குவித்து முதலிடத்​தை​யும், நியூஸிலாந்​தின் சுசி பேட்ஸ் 10,652 ரன்கள் குவித்து 2-ம் இடத்​தை​யும், இங்​கிலாந்​தின் சார்​லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்​கள் குவித்து 3-வது இடத்​தை​யும் பெற்றுள்ளனர். ஸ்மிருதி மந்​தனா 10,053 ரன்​களு​டன்​ 4-ம்​ இடத்​தில்​ உள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here