யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகளில் 7,000 கிரிமினல்கள் கைது

0
215

உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றுமாநில அதிரடிப்படை யான எஸ்டிஎப் தெரிவித்துள்ளது.

உ.பி.யில் கடந்த மார்ச் 2017-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது உ.பி.யில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல், வினாத்தாள் கசிவு,சைபர் குற்றங்கள், நில அபகரிப்புஎன குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக புகார் நிலவியது. சட்டம்ஒழுங்கும் மோசமாக இருந்தது.இதையடுத்து மாநிலம் முழுவதும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமாறு எஸ்டிஎப் எனப்படும் அதிரடிப்படைக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்நிலையில் உ.பி.யில் கடந்த ஏழரை ஆண்டுகளில்7,015 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். தலைமறைவான குற்றவாளிகளின் பலகோடி ரூபாய் சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கடும் நடவடிக்கைகளால் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்திருப்பதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து அதிரடிப்படையின் ஏடிஜி அமிதாப் யாஷ் கூறியதாவது: இதுவரை கைது செய்யப்பட்ட 7,015 கிரிமினல்களில் பலருக்கு ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பலர் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக 193 பேரும், சைபர் குற்றங்கள் தொடர்பாக 379 பேரும், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட 189 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,080ஆயுதங்களும், 8,229 துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மது கடத்திய 523 பேர் கைதுசெய்யப்பட்டு 80,579 மதுப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஏழரை ஆண்டுகளில் 559 குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆள் கடத்தல், கொள்ளை மற்றும் கொலை குற்றங்களும் அடங்கும். இந்த தடுப்பு நடவடிக்கையில் 3,970 பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழரை ஆண்டுகளில் 2,670 வழக்குகளை எஸ்டிஎப் வெற்றிகரமாக முடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here