கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி எல்தபோன்ஸ் (60), நேற்று அதிகாலை ஜெரோபின் (49), பனியடிமை (59) ஆகியோருடன் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றார்.
கடலில் வலைவீசி மீன்பிடித்தபோது எதிர்பாராதவிதமாக எல்தபோன்ஸ் தவறி கடலில் விழுந்தார். உடனிருந்த மீனவர்கள் அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.