Home மாநில செய்திகள் இரணியல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீஸ் விசாரணை

இரணியல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீஸ் விசாரணை

0

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை  பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் ராஜ் (55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் உடல் பலவீனத்தால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் குடல் இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் பின்னர் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (செப். 14ஆம் தேதி) காலை 8 மணி முதல் ஜெயசீலன் ராஜை திடீரென காணவில்லை. அவரை உறவினர்கள் தேடிய போது மாலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பிளாட்டு முன்பு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அவரது மனைவி மோரிஸ் (48) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசீலன் ராஜ் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் மன வருத்தத்தில் ஏதோ விஷமருந்தை உட்கொண்டு இறந்துள்ளதாக மோரிஸ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version