Home மாநில செய்திகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை

0

தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம் செப்​.15-ம் தேதி தொடங்கி வைக்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், முதல்​கட்​ட​மாக 1 லட்​சத்து 28,499 குழந்​தைகளுக்கு வழங்​கப்படுகிறது. இதற்​காக 2 நிறு​வனங்​களுக்கு ஒப்​பந்த ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, தமிழக மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தவெக அரசின், தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் ஜூன் 22-ம் தேதி முதல், பிறந்த ஒவ்​வொரு குழந்​தையை​யும், தாயை​யும் கவுரவிக்​கும் வித​மாக தங்​கம் மோதிரம் வழங்​கப்பட உள்​ளது.

இதில் ஒரு கிராம் எடை​யுள்ள 4 லட்​சத்து 41,667 தங்க மோதிரங்​கள் வழங்க அரசாணை வழங்​கப்​பட்​டுள்​ளதைத் தொடர்ந்​து, கடந்த ஜூலை 14-ல் தமிழக மருத்​து​வப்​பணி​கள் கழகத்​தால் ஒப்​பந்​தப்​புள்ளி கோரப்​பட்​டது.

11 நிறு​வனங்​கள் தமிழ்​நாடு டெண்​டர்ஸ் போர்ட்​டல் மூல​மாக பங்​கேற்று தங்​களின் விலைப்​புள்ளி விவரத்தை தெரி​வித்​தனர். இதில் குறைந்த விலைப்​புள்​ளியை வழங்​கிய ஜாய் ஆலுக்​காஸ் மற்​றும் கல்​யாண் ஜுவல்​லர்ஸ் நிறு​வனங்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் இத்​திட்​ட​மானது அண்ணா பிறந்த நாளான செப்​.15-ம் தேதி தொடங்கி வைக்​கப்பட உள்​ளது. ஜூன் மாதத்​தில் இருந்து 4 மாதங்​களுக்கு தேவை​யான ஒரு லட்​சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்​களை பயனாளி​களுக்கு வழங்​கு​வதற்​காக, ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனம் மற்​றும் கல்​யாண் ஜுவல்​லர்ஸ் நிறு​வனத்​துக்கு 70:30 என்ற சதவீதத்​தில் பணி ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது.

தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​ட​மானது, தமிழக அரசின் சுகா​தா​ரச் சேவை​களில் மக்​களின் நம்​பிக்​கையை வலுப்​படுத்​தும் நோக்​கிலும், அரசு மருத்​து​வ​மனை​களில் மக்​களுக்கு நம்​பிக்​கையை ஏற்படுத்தும் நோக்​கிலும், அரசு மருத்​து​வ​மனை​களில்பிறக்​கும் குழந்​தைகளின் பிறப்பை நினை​வு​கூரும் வகை​யிலும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version