Home சினிமா செய்திகள் ‘அன்பே டயானா’ என்ற தலைப்பு ஏன்?

‘அன்பே டயானா’ என்ற தலைப்பு ஏன்?

0

பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு என பலர் நடித்​துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்கர் இசையமைத்​துள்ளார்.

நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்​யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னை​யில் நடைபெற்​றது. படக் ​குழு​வினர் கலந்​து​ கொண்டனர்.

விழா​வில் இயக்​குநர் பாரி இளவழகன் பேசும்​போது, “நான் இயக்கி நடித்த ‘ஜமா’ படத்​தைத் தொடர்ந்து இப்​படத்​துக்​கும் ஆதரவளித்த ரசிகர்​களுக்கு நன்​றி. இந்​தப் படத்தை நான் இயக்க வேண்​டும் என்ற உறு​தி​யுடன் ஆரம்​பம் முதலே தயாரிப்​பாளர் யுவராஜ் கணேசன் என் மீது வைத்த நம்​பிக்​கையே இந்த வெற்றிக்குக் காரணம். ஓர் இயக்​குநருக்கு தனது எழுத்​தின் மீது தயாரிப்​பாளர் முழு​மை​யான நம்​பிக்கை வைப்​பது மிகப்பெரிய வரம்.

‘அன்பே டயா​னா’ படத்​தில் நான் எழு​திய வசனத்​தையோ, காட்சியையோ மாற்ற வேண்​டும் என்று அவர் கூற​வில்​லை. என் எழுத்​தை​யும், என் பார்​வையை​யும் முழு​மை​யாக நம்பி முழு சுதந்திரம் அளித்​தார். இந்​தப் படத்​தின் கதா​பாத்​திரங்​கள் குறித்து நான் ஆரம்​பத்திலிருந்தே தெளி​வாக இருந்​தேன். எந்​தக் கதாபாத்திரத்​தில் யார் நடிக்க வேண்​டும் என்ற நம்​பிக்​கை​யும் உறு​தி​யாக இருந்​தது. அந்த நம்​பிக்​கையை தயாரிப்​பாளர் முழுமை​யாக மதித்​தார்.

‘அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்​காமல் அன்பே டயானா என்று ஏன் வைத்​தீர்​கள் ? என்று என்​னிடம் பலர் கேட்​டார்​கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்​தின் உள்ளே மட்டுமே சிறப்​பாக ஒலிக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் தலைப்​பாக வைக்கவில்லை. கதை எழுதும்​போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்​படும் என்று நம்​பினேன். இன்று ரசிகர்​கள் அந்​தக் கதா​பாத் திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்​டாடு​வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version