Home தேசிய செய்திகள் கேரள அரசு லாட்டரியின் முதல் பரிசு ரூ.30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? – பரிசை...

கேரள அரசு லாட்டரியின் முதல் பரிசு ரூ.30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? – பரிசை வாங்க இதுவரை யாரும் வரவில்லை

0

கேரள அரசின் ஓணம் பம்​பர் லாட்டரி விற்பனை கடந்த ஜூலை மாதம் தொடங்​கியது. ஒரு டிக்​கெட்​டின் விலை ரூ.500 என்​ற​போ​தி​லும் பலரும் வாங்​கினர். 90 லட்​சம் டிக்கெட்​டு​கள் அச்சடிக்​கப்​பட்​டன. இதன் மூலம் கேரள அரசுக்கு மொத்​தம் ரூ.450 கோடிக்கு மேல் வரு​மானம் கிடைத்​தது. இந்த ஓணம் பம்​பர் லாட்​டரி​யின் மொத்த பரிசுத்​தொகை ரூ.125 கோடி.

இந்​நிலை​யில், ஓணம் பம்​பர் லாட்​டரி குலுக்​கல் 4 நாட்​களுக்கு முன்பு திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்​றது. இதில் முதல் பரிசு ரூ.30 கோடி, டிஎல் 360615 என்ற எண்​ணுக்கு கிடைத்​தது. இந்த டிக்​கெட் கண்​ணூர் மாவட்​டம் தளிப்​பரம்​பில் உள்ள ஒரு கடை​யில் விற்​பனை​யானது தெரிய​வந்​தது. ஆனால் இது​வரை அந்த டிக்​கெட் வைத்​திருக்​கும் நபர் லாட்​டரி ஏஜென்​சிகளை​யோ, எந்த வங்கியையோ அணுக​வில்​லை.

இந்​நிலை​யில், டிக்​கெட் வைத்​திருக்​கும் நபர் இவர்​தான் என்று கூறி பொய்​யான பல தகவல்​கள் சமூக வலை​தளங்​களில் உலா வரு​கின்​றன. மட்​டனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் மனு என்​பவர்​தான் டிக்​கெட் வாங்​கிய நபர் என்று பெரும்​பாலான சமூக ஊடகங்களில் செய்​தி​கள் வரு​கின்​றன. மேலும் இவர்​தான் அந்த லாட்​டரி வைத்​திருக்​கும் நபர் என்று ஏஐ புகைப்​படங்​களும் உலா வருகின்றன.

மற்​றொரு சமூக வலை​தளப் பதி​வில் வெற்றி பெற்ற லாட்​டரி டிக்​கெட் தொகை வட்​டோலி​யில் உள்ள கனரா வங்​கிக் கிளை​யில் டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது என்று கூறப்​பட்​டுள்​ளது. ஆனால், இவை அனைத்​துமே பொய்​யான தகவல்​கள் என்று லாட்​டரித் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். நேற்று இரவு வரை வெற்றி பெற்ற லாட்​டரி சீட்​டுக்​குரிய நபர் யாரென்று தெரி​யாத​தால் அவரைத் தேடிக் கண்​டு​பிடிக்​கும் முயற்​சி​யில் லாட்​டரித் துறை அதி​காரி​களும், ஏஜெண்​டு​களும்​ இறங்​கி​யுள்​ளனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version