Home சினிமா செய்திகள் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?

0

தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள படம், ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள் காரணமாக அப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்ட மறு ஆய்வு குழு இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை.

இதற்கிடையே ஜனநாயகன் படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகிப் படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இப்படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ஜனநாயகன் மே 7-ல் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அந்தப் படம் எப்போது வந்தாலும் வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version