Home சினிமா செய்திகள் ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு எப்போது? – நடிகர் ஆதி பதில்

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு எப்போது? – நடிகர் ஆதி பதில்

0

‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு நடிகர் ஆதி பதிலளித்துள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் ‘மரகத நாணயம் 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆதி.

அதில் ‘மரகத நாணயம் 2’ விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் பாக குழுவினருடன், இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள். முதல் கதை சிறியதாக இருந்தது, 2-ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். முதல் பாகத்தில் எப்படி பொறுப்புடன் பணிபுரிந்தோமோ, அதேபோல், 2-ம் பாகத்திலும் பணிபுரியவுள்ளோம். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’. 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version