Home சினிமா செய்திகள் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய்?

ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய்?

0

நடிகர் விஜய்யின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அதிரடியான ஆக் ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய் முழு வீச்சில் ஈடுபட இருப்பதால் இது அவரது கடைசிப் படம் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் முக்கியமான சமூகப் பிரச்சினை ஒன்றை அவர் பேசப்போவதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version