Home சினிமா செய்திகள் இரட்டை குழந்தைகள்… தந்தை ஆன கவின் மகிழ்ச்சிப் பகிர்வு!

இரட்டை குழந்தைகள்… தந்தை ஆன கவின் மகிழ்ச்சிப் பகிர்வு!

0

தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகர் கவின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கவின் தனது தோழியான மோனிகா டேவிட்டை 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்னத் திரையில் தனது கலையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வருகிறார்.

‘டாடா’ படம் நாயகனாக கவினுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. நயன்தாராவுடன் கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version