Home மாநில செய்திகள் தவெக என்றால் தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

தவெக என்றால் தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

0

திட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதால், தவெகவை ‘தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்வை செப்.17 முதல் அக்.17 வரை கொண்டாட இருக்கிறோம். இதற்காக ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்தம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிற அரசியல்வாதிகள் மத்தியில் ரத்தம் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாக பாஜகவினர் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version