டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஷிக் 56 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார்.
நாராயண் ஜெகதீசன் 27, அஷ்வத் வல்தப்பா 28, வசீம் அகமது 16 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2விக்கெட்களை வீழ்த்தினர். நடராஜன், சாய் கிஷோர், இசக்கிமுத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துஷார் ரஹேஜா 52 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், பிரதோஷ் ரஞ்ஜன் பால் 41 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் விளாசினர். ஆட்ட நாயகனாக துஷார் ரஹேஜா தேர்வானார்.
