Home விளையாட்டு செய்திகள் டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

0

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.

திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அஸ்வின் 36, ஷிவம் சிங் 34, ஜெயந்த் 25, ஹுன்னு சைனி 35, விமல் குமார் 24, வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version