Home சினிமா செய்திகள் “ஊரே படத்தைக் கொண்டாடுகிறது” -‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவுக்கு சூரி புகழாரம்

“ஊரே படத்தைக் கொண்டாடுகிறது” -‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவுக்கு சூரி புகழாரம்

0

2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் மதிய உணவருந்தினர்.

அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உரையாடினார். உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version