Home சினிமா செய்திகள் மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 15-ல் ரிலீஸ்

மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 15-ல் ரிலீஸ்

0

மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகிறது.

ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் டி’காமா’ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் எழுதியுள்ளார். பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து இப்படம் பேசுகிறது.

‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் டிச.15 அன்று வெளியாகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version