தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. 2 எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இதில் வெற்றி, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, வசனத்தை கவிதா பாரதியும் தயாள் பத்மநாபனும் இணைந்து எழுதியுள்ளனர். ஜூன் 25-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில், கதாபாத்திர அறிமுகம் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும்போது,” உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது. 1972ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஓர் இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்த காலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது” என்றார்.
