இந்தியில் 2009-ம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். இசைக் கலைஞருமான அவர் பாடல்களும் பாடி வருகிறார். தனி ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். நடிகையாக 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதி ஹாசன, அந்தப் பயணம் பற்றி பேசியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் பயணம் எனக்கு என்னைப் பற்றியும், என் தொழிலைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு படைப்பின் வெற்றி, தோல்வியைத் தாண்டி, அதை உருவாக்க ஒரு பெரிய குழுவின் கூட்டுமுயற்சி அவசியம் என்பதை உணர வைத்திருக்கிறது.
இந்த 17 ஆண்டுகளில் திரையுலகம் எனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம், என்னை வலிமையானவளாகவும், மன உறுதியானவளாகவும் மாற்றி இருக்கிறது. எந்த விமர்சனத்தையும், சவாலையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை அது எனக்குக் கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
