Home சினிமா செய்திகள் ‘த பேட்மேன்’ 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளி வைப்பு

‘த பேட்மேன்’ 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளி வைப்பு

0

மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம், ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜுயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. காவல்துறை மற்றும் பேட்மேனுக்கு கடும் சவாலாக இருக்கிறான், ஒரு சீரியல் கில்லர். தனது சாகசத்தோடு, துப்பறியும் திறனையும் கொண்டு குற்றவாளியை பேட்மேன் பிடிப்பதுதான் படம்.

இது உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கும் இதில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்கிறார். 2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக இதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஒரு முறை இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 2027-ம் ஆண்டு அக்.1-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version