Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: பணம் வசூலிப்பவர் மீது தாக்குதல்

தக்கலை: பணம் வசூலிப்பவர் மீது தாக்குதல்

0

கேரளபுரம், கண்டங்கோணம் பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர், தவணை முறையில் பொருட்கள் வழங்கி பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. சம்பவத்தன்று, தக்கலை காவல் நிலையம் முன்பு சசி பைக்கில் வரும்போது, அங்கு நின்ற சிவகுமார் அவரை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சசி, தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தக்கலை போலீசார் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version