Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

0

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் லிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 34), தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுக்குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு ஜாண் பீட்டர் வீட்டில் புறா வளர்த்துள்ளார். ஆனால் இது மனைவிக்கு. பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஜாண் பீட்டர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று (நவம்பர் 24) அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version