ருமேனியாவில் உள்ள புக்காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேக் போக்டன்-டேனியலுடன் மோதினார். 68-வது நகர்த்தலின்போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் வின்சென்ட் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேபியானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்டென் வான் ஃபாரஸ்ட், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
