Home தேசிய செய்திகள் வாக்காளர்களுக்கு ஒற்றை செயலி விரைவில் அறிமுகம்

வாக்காளர்களுக்கு ஒற்றை செயலி விரைவில் அறிமுகம்

0

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த செயலில் தற்போது இறுதி மற்றும் சோதனை கட்டத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பிஹார் தேர்தலுக்கு முன் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “வாக்காளர் வாக்குப்பதிவு செயலி, உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் செயலி, தேர்தல் முடிவுகள் செயலி போன்ற ஏற்கெனவே உள்ள செயலிகளும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வலைதளங்களும்

புதிய செயலியில் ஒருங்கிணைப்படும். மார்ச் மாதம் நடைபெற்ற தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இதற்கான கருத்து உருவானது” என்று தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version