Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை: வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்

வெள்ளிச்சந்தை: வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்

0

வெள்ளிச்சந்தை அருகே ஆசாரி விளை பகுதியை  சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செல்வகனி (58). இவர் மேலச்சங்கரன் குழி பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் மனைவி நிதியா.    செல்வகனி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கிய தொடர்பாக நிதியா மற்றும் ராஜேஷ் குமார்  கடந்த சில நாட்களாக பிரச்சனையை ஏற்படுத்தி வந்தனர்.  

நேற்று முன்தினம் இரவில் செல்வகனி தனது வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ்குமார் மற்றும் அவரது மனைவி நிதியா ஆகியோர்  சேர்ந்து செல்வக்கனியின் வீட்டுக் கதவை உடைத்து அத்துமீறி  உள்ளே  புகுந்துள்ளார்கள். இதனால் தூங்கிக் கொண்டு இருந்த  செல்வக்கனி திடுக்கிட்டு விழித்தார்.

 அப்போது அவரை பார்த்து கெட்ட வார்த்தைகள் பேசிய ராஜேஷ் குமார் தன் கையில் வைத்திருந்த பைக் சாவி  மூலம்  செல்வகனியின் கன்னத்தில் குத்தினாராம்.   இதில் காயமடைந்த அவர் குமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில்  வெள்ளி சந்தை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் நிதியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version