Home சினிமா செய்திகள் ‘ராம் AND லீலா’ ஆனது ‘ராம் IN லீலா’ – தணிக்கைக்குப் பின் மாறிய தலைப்பு!

‘ராம் AND லீலா’ ஆனது ‘ராம் IN லீலா’ – தணிக்கைக்குப் பின் மாறிய தலைப்பு!

0

ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ படத்தின் பெயர் தணிக்கைக்குப் பின்பு ‘ராம் AND லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.

‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ‘ராம் IN லீலா’ படத்தில் நடித்து வந்தார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வர்திகா ஜெயின் நாயகியாக நடித்துள்ளார்.

ராமசந்திரன் கண்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, அன்கிட் மேனன்  இசை அமைத்துள்ளார்.

படம் தணிக்கைக்காக சென்ற போது, ‘ராம் IN லீலா’ என்பது இந்து மதக் கடவுளின் பெயரைக் குறிப்பது போல இருப்பதாகவும், படத்தின் பெயரை மாற்றும்படி தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் படத்தின் பெயர் மாற்றப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு பகிர்ந்துள்ள தகவலில் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளபதிவில், ’மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு! ‘ராம் AND லீலா’. ஆகஸ்ட் 21-ம் தேதி பெரிய திரையில் இந்த உற்சாகத்தை காணுங்கள்’ என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான முதல் தோற்றம், ட்ரெய்லர்களில் ‘ராம் IN லீலா’ வாக இருந்த படத்தின் பெயர் தணிக்கை சான்றிதழ் குறித்த அறிவிப்பில் ‘ராம் AND லீலா’ மாறி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version