Home மாநில செய்திகள் பிற மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டுசெல்ல அனுமதி வேண்டும்: குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

பிற மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டுசெல்ல அனுமதி வேண்டும்: குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

0

வெளி மாநிலங்​களுக்கு கனிமங்​களை கொண்டு செல்ல விதிக்​கப்​பட்ட தடையை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கல்​கு​வாரி, கிரஷர் மற்​றும் லாரி உரிமை​யாளர் சங்​கம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

திண்டுக்கல்லில் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் சின்​னச்​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: கடந்த ஜூலை 27 முதல் வெளி மாநிலங்​களுக்கு கனிம வளங்​களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தற்​காலிகத் தடை விதித்​துள்​ளது. இதனால் எல்​லை​யோர மாவட்​டங்​களில் உள்ள குவாரி உரிமை​யாளர்​கள், தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்து வங்​கி​களில் கடன் பெற்றுதொழில் செய்​து​வரும் நிலை​யில், இந்​தத் திடீர் தடை​யால் தொழிலா​ளர்​கள் வேலை​யிழக்​கும் அபாய​மும், உரிமை​யாளர்​கள் கடனை அடைக்க முடி​யாத சூழலும் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, சட்​டத்​துக்கு உட்​பட்டு அண்டை மாநிலங்​களுக்கு கனிமங்​களை கொண்டு செல்ல அரசு மீண்​டும் அனு​ம​திக்க வேண்​டும்.

40 முதல் 50 ஆண்​டு​களாக முறை​யான அனு​மதி பெற்று இயங்கி வந்த பல குவாரி​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக மதுரை மாவட்​டத்​தில் 11 குவாரி​கள், கோவையில் 6 குவாரி​கள், திருப்​பூர் மாவட்​டத்​தில் 17 குவாரி​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. அரசு இதை விரைந்து ஆய்வு செய்​து,

தவறுகள் ஏதேனும் இருப்​பின் நிபந்​தனை​களு​டன் மீண்​டும் குவாரி​களை இயக்க அனு​ம​திக்க வேண்​டும்.

கனிமங்​களுக்​கான விலையை அரசே நிர்​ண​யம் செய்​துள்​ளது. அரசு நிர்​ண​யித்த விலை​யான எம்​.​சாண்ட் ரூ.5000, ஜல்லி ரூ.4000, பி.​சாண்ட் ரூ.6000 என்ற விலை​யை​விட சந்​தை​யில் உள்ள போட்டி காரண​மாக குவாரி உரிமை​யாளர்​கள் குறை​வான விலை​யிலேயே பொருட்​களை விற்​பனை செய்​கின்​றனர். விலையை உயர்த்தி விற்​ப​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்​டு​கள் முற்​றி​லும் தவறானவை.

முன்​பெல்​லாம் குவாரி உரிமம் புதுப்​பிக்க 2 முதல் 3 ஆண்​டு​கள் வரை ஆகும் நிலை இருந்​தது. ஆனால் தற்​போதுள்ள ஆட்​சி​யின் நடவடிக்​கைகளால் விரை​வாக சுற்​றுச்​சூழல் அனு​மதிஉள்​ளிட்​டவை கிடைக்கின்​றன. இது வரவேற்​கத்​தக்​கது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version