தமிழக காவல்துறையில், உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்கள் 10 ஆண்டு பணிபுரிந்த பின்னர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேல் அதிகாரிகள் உதவி ஆய்வாளர்களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவர். அதன்படி, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள், காலிப் பணியிடங்களின் அடிப்படையில், உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-25 ஆண்டுக்கான பதவி உயர்வில், 57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
