Home சினிமா செய்திகள் கதையின் நாயகனாக மீண்டும் பிரேம்ஜி

கதையின் நாயகனாக மீண்டும் பிரேம்ஜி

0

இயக்குநர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி கடந்த வருடம் வெளியான படம், ‘வல்லமை’. இதில் பிரேம்ஜி நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சினையை பேசிய விதத்திலும் பாராட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணி புதிய படத்தில் மீண்டும் இணைகிறது. மியூசிக்கல் ஹாரராக உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி கவனிக்கிறார். பிரேம்ஜி இசை அமைக்கும் இப்படத்தை, எழுதி, இயக்கி, பேட்லர்ஸ் சினிமா சார்பாக, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version