Home சினிமா செய்திகள் லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம்

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம்

0

‘பூக்கி பொன்னம்மா’ என்ற இசை ஆல்பம் முழுவதும் லண்டனில் படமாகியுள்ளது. இந்தப் பாடலில் பாலாஜி, மதுமிதா நடித்துள்ளனர். நடன இயக்குநர் சசி, நடனம் அமைத்து இதை இயக்கியுள்ளார். ஏ.ஜே, இசை அமைத்துள்ள இப்பாடலை, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சினேகா இணைந்து பாடியுள்ளனர். பாடலை கார்த்திக் எழுதியுள்ளார்.

நடன இயக்குநர் சசி கூறும்போது,‘‘லண்டனில் படப்பிடிப்பு நடத்துவது உண்மையிலேயே கடினமாக இருந்தது. வெயில் இருப்பது போல வெளியே தெரிந்தாலும், சில இடங்களில் மைனஸ் 5 டிகிரி வரை குளிர் இருந்தது. மதுமிதாவும் பாலாஜியும் குளிரை பொருட்படுத்தாமல் ஏரிக்கரையில் நடனம் ஆட வேண்டியிருந்தது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

ஒவ்வொரு இடத்துக்கும் நீண்ட நேரம் பயணம் செய்தோம். கார்ட்ஸ்வெல் பகுதியில் இருந்து எடின்பர்க், அங்கிருந்து சென்ட்ரல் லண்டன் என சில பயணங்களே, 3 மணி நேரம் வரை இருந்தன. சரியான கால்ஷீட், போதுமான நேரம் என எதுவுமே இல்லாத சூழலில், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம்.

பின்னணியில் நடனமாடிய கலைஞர்கள் பெல்ஜியம், ஸ்பெயின், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்கள். அதனால் இந்தப் பாடல் ஒரு சர்வதேச அளவிலான படைப்பாக உருவானது” என்றார்.

ஸ்டோரி கல்சர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பம் பாடலை சரிகம இந்தியா வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version